கரோனா தொற்று: புதிய எண்ணிக்கை...

டிச.5 வரை இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை அதன் பிறகு புதிய தொற்று மற்றும் வானிலை காரணமாக அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்று: புதிய எண்ணிக்கை...

புது தில்லி: நாட்டில் புதிதாக 756 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,049 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் தலா இருவரும் ஜம்மு-காஷ்மீரில் ஒருவரும், மொத்தமாக 5 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிச.5 வரை இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை அதன் பிறகு புதிய தொற்று மற்றும் வானிலை காரணமாக அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமாக டிச.31 அன்று 841 தொற்று ஒரே நாளில் உறுதிசெய்யப்பட்டது. இதில் பெரும்பான்மையானவர்கள் வீட்டில் தனித்து இருந்து சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர்.

புதிய வகை ஜேஎன்.1 தொற்று அதிகளவில் பரவவில்லை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்குமளவுக்குக் கொண்டு செல்வதில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா இதுவரை மூன்று கரோனா அலைகளைக் கடந்துள்ளது. 2020-ல் கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து 4.5 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் நோயிலிருந்து மீண்ட விகிதம் 98.81 சதவிகிதமெனவும் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com