தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

மனநலம் குன்றிய பெண்ணுக்குத் தொந்தரவு: தூய்மை பணியாளர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார் மருத்துவமனையின் தூய்மை பணியாளர்.

Published On :

22 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற தூய்மை பணியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,

ராஜஸ்தானில் உள்ள மருத்துவ கல்லூரியின் மனநோய் பிரிவில் அனுமதிக்கப்படிருந்த பெண்ணிடம் அதே மருத்துவமனையில் தூய்மை பணியில் இருந்த நபர் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

அந்தப் பெண் இரவு 10.30 மணிபோல கழிவறைக்குச் சென்ற போது குற்றம் சாட்டப்பட்டவர் அங்கு தூய்மை பணியில் இருந்துள்ளார். 

பெண் சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததைக் கண்டு தாயும் அவரது சகோதரரும் கழிவறைக்குச் சென்று பார்க்கும்போது உள்புறமாகத் தாளிடப்பட்டிருந்தது.

கதவைத் திறந்துபோது குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணைத் துன்புறுத்தவதைக் கண்ட அவர்கள் அந்த நபரைக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்தப் பிரிவின் தலைமை மருத்துவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இனி பெண் நோயாளிகள் இருக்கும் பிரிவுகளில் பெண் பணியாளர்கள் உடன் செல்லவும் ஆண் பணியாளர்கள் அந்த இடங்களில் இல்லையென்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.