நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் “ஹாய்” திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய படம் “ஹாய்”. இப்படத்தை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆக. 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதல்முறையாக நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள “ஹாய்” திரைப்படம் வரும் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு இன்று (ஆக. 7) சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” பட வெளியீட்டை முன்னிட்டு இப்படம் தள்ளிவைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சமீபத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The new release date for the film "Hi," starring Kavin and Nayanthara, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர்கள் கவின், நயன்தாராவின் ஹாய் வெளியீட்டில் மாற்றம்?

நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் படத்தின் 3வது பாடல் தேதி!

நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் படத்தின் வெளியீட்டுத் தேதி!

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

முதல்வர் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி | DMDK | TN Assembly



