ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நடிகர்கள் கவின், நயன்தாராவின் ஹாய் வெளியீட்டில் மாற்றம்?

ஹாய் திரைப்பட வெளியீட்டில் மாற்றம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது..

Published On :

நடிகர்கள் கவின், நயன்தாரா நடிப்பில் உருவான ஹாய் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படவுள்ளதாம்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படாம் ஹாய். இதனை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, இப்படம் ஆக. 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டது. இந்த நிலையில், இப்படம் தள்ளிச்செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம், அன்றைய நாளில் நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் நடிகர் விஷாலின் மகுடம் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக, திரையரங்கங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் ஹாய் தயாரிப்பு நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

The release date of the movie Hi, starring Kavin and Nayanthara, is reportedly set to change.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.