பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: அப்சல்

கடந்த பத்தாண்டுகள் பாஜக ஆட்சிக்காலம் அநீதியின் காலமாகும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீம் அப்சல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த பத்தாண்டுகள் பாஜக ஆட்சிக்காலம் அநீதியின் காலமாகும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீம் அப்சல் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மீம் அப்சல், “ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கானது. 'கடந்த 10 ஆண்டுகள், அநீதியின் காலம்' என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். 

ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி மகாராஷ்டிராவில் நிறைவு செய்கிறார். இதில் 66 நாட்களில் 15 மாநிலங்களின் 110 மாவட்டங்களுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த பத்தாண்டுகள் அநீதிக்கான உதாரணங்களாகும். பாஜக ஆட்சியில் நாட்டின் அனைத்து துறைகளிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 

பாஜக அரசாங்கம் ஜனநாயகத்தையும், நமது அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு அனைத்தையும் இல்லாமலாக்கிவிட்டது. சில முதலாளிகளின் கைப்பாவை அரசாக இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 

ஜம்மு காஷ்மீர் மக்களின் மீது கடுமையாக பாகுபாடு காட்டப்படுகிறது. என்று கூறினார். பாஜக அரசின் இத்தகைய செயல்களை எதிர்த்து ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com