
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் ஜன.22 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அன்றைய நாள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி பங்குச்சந்தைக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, விடுமுறை நாளான இன்று, பங்குச்சந்தை வர்த்தகம் வழக்கம்போல் செயல்பட்டது.
ஜன.22 ஆம் தேதி பங்குச் சந்தை காலை 9 மணிக்குப் பதிலாக மதியம் 2.30 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.