/

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்று (ஜன. 21) சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜனவரி 2024, 3:23 am

DIN

தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்று (ஜன. 21) சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

'தென்மேற்கு இந்திய ரிட்ஜ் பகுதியில் அதிகாலை 3:39 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர்  அளவுகோலில் 6.2 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.