அயோத்தியில் ஹெலிகாப்டர்கள் மூலம் தூவப்பட்ட பூக்கள்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டையின் போது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் கோயில் மீது மலர் தூவப்பட்டது.
அயோத்தியில் ஹெலிகாப்டர்கள் மூலம் தூவப்பட்ட பூக்கள்!
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டையின் போது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் கோயில் மீது மலர் தூவப்பட்டது.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவின் முக்கிய நிகழ்வான பால ராமரின் பிராண பிரதிஷ்டை இன்று நண்பகல் 12.29.08 வினாடிக்கு 121 வேதகர்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்றது. 84 வினாடிகளில் 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. 

சிலை பிரதிஷ்டைக்கான பூஜையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் போது அயோத்தி கோயில் மற்றும் அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டது.

4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன.

இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com