அசைவ உணவுகளுக்கு தடை, சர்ச்சையில் சிக்கிய சொமேட்டோ!

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அசைவ உணவுகள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய சோமேட்டோ, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 
அசைவ உணவுகளுக்கு தடை, சர்ச்சையில் சிக்கிய சொமேட்டோ!

பிரபல உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ, தற்காலிகமாக அசைவ உணவுகளை தங்களது வலைதளத்தில் தடை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. சொமேட்டோ பயனாளர்கள் வலைதளத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

ராமர் கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை, உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் தற்காலிகமாக அசைவ உணவுகள் விநியோகத்தை சொமேட்டோ தடை செய்திருந்தது. 

இதனால் பாதிக்கப்பட்ட பல பயனாளர்கள் எக்ஸ் தளத்தில் சொமேட்டோ மீதான தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். அரசின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது சொமேட்டோ. 

இதையும் படிக்க: பல்கலை.க்குள் அனுமதியில்லை: பேருந்து மீது ஏறிய ராகுல்.. காட்சியும் மாறியது!
 
சொமேட்டோவின் விளக்கத்தை பலரும் வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். 'நான் அசைவம் உண்பவன் அல்ல, ஆனால் மற்ற அனைத்து உணவு விநியோக நிறுவனங்களும் அசைவ உணவுகளை தடை செய்யாதபோது, நீங்கள் மட்டும் தடைசெய்வது, உங்களது அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுகிறது' என ஒருவர் சொமேட்டோவின் பதிலில் கமெண்ட் செய்துள்ளார். 

'இது போன்ற நிகழ்ச்சிகளின் போது பொதுஇடங்களில் அசைவம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால் ஒரு தனிநபர் அவரது விருப்பத்திற்கேற்ற உணவை, அவர் வீட்டில் கூட சாப்பிடக்கூடாது எனச் சொல்வதற்கு நீங்கள் யார்? என ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

மேலும், இந்தியாவில் இந்துக்கள் மட்டும் வாழவில்லை, அரசு மக்களின் உணவில் கை வைக்க முடியாது எனப் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பொதுநல வழக்கு தொடரவேண்டும் எனப் பலர் கமெண்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com