மருத்துவ சேவையில் டிரோன் பயன்பாடு: எய்ம்ஸில் அறிமுகம்

அவசர காலங்களில் டிரோன் பயன்பாடு பெரிதும் பயனளிக்கும் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. 
மருத்துவ சேவையில் டிரோன் பயன்பாடு: எய்ம்ஸில் அறிமுகம்

புவனேஷ்வர்: எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவம் சார்ந்த பொருள்களின் போக்குவரத்துக்கு டிரோன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

டிரோன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 60 கிமீ தூரத்தில் உள்ள கோர்தா மாவட்டத்தில் உல்ள டங்கி சமுதாய நல மையத்துக்கு ரத்தம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தூரத்தைக் கடக்க டிரோன் 35 நிமிடம் எடுத்து கொண்டது.

ஒடிசாவில் மட்டுமில்லாது நாட்டிலேயே இதுதான் முதன்முறை டிரோனை இரத்த பைகள் பரிமாற்றத்துக்கு பயன்படுத்துவது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை நேரங்களிலும் இயற்கை பேரிடரின் போதும் மருத்துவ சேவைகளுக்கு இந்த டிரோன்கள் உதவும். மருத்துவ சேவையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நன்மையளிக்கும் என புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அசுதோஷ் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

12 கிலோ கொண்ட டிரோன் அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. ஒரே நேரத்தில் 2 முதல் 5 கிலோ வரை பொருள்களை இதில் அனுப்ப முடியும். இதனை ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனம் தயாரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com