பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிகாரில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது!

பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Published On :

பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிகாரில் கடந்த 2020, சட்டப் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. கடந்த 2022, ஆகஸ்டில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். துணை முதல்வராக ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாதின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.

இந்நிலையில், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதீஷ் குமாா் ஈடுபட்டாா். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய பகுதிகளின் கட்சிகளின் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வா் நிதீஷ் குமாரை கட்சியின் மூத்த தலைவா்களான ராஜீவ் ரஞ்சன் சிங், சஞ்சய் குமாா் ஜா, தேவேஷ் சந்திர தாக்குா் உள்ளிட்டோா் அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்த நிலையில், பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கு நிபந்தனையுடன் ஆதரது தருவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.