பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உத்தரப் பிரதேசத்தில் பிளாஸ்டிக் சாலைகள்!

உத்தரப் பிரதேசத்தில் சாலைகளை சீரமைக்கும் பணி மற்றும் புது சாலைகளை உருவாக்கும் பணிகளில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகிறது. 

கோப்புப்படம்

Published On :

உத்தரப் பிரதேசத்தில் புதிய சாலைகள் மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் பிளாஸ்டிக்குகள் பயன்பாட்டை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தினார். அதன்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கள், சாலை உருவாக்கத்தில் மறு உபயோகம் செய்யப்படுகின்றன.

சாலைகள் உருவாக்கத்தில் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது, செலவைக் குறைப்பதோடு, நீண்ட நாள்கள் உழைக்கும் சாலைகள் உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமன்றி சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளை மறு உபயோகம் செய்ய சிறந்த வழியாக இது கருதப்படுகிறது.

இதனால் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை மக்களிடையே அரசு ஊக்குவிக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் இந்த முயற்சி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 

பொதுப்பணித்துறை அளித்துள்ள தகவலினடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 813 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் இந்த முறையில் கட்டப்பட்டும், புதுப்பிக்கப்பட்டுமுள்ளன. 

வோர்ல்ட் பேன்க் வலைப்பதிவின் தரவுகளின்படி பிளாஸ்டிக் மூலம் சாலைகள் உருவாக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது. 2500 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான அளவில் பிளாஸ்டிக் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் சாலைகளை அமெரிக்கா உள்பட 15 நாடுகள் உருவாக்கிவருகின்றன. 

சாலைகளை விரிவு மற்றும் பலப்படுத்தும் பணிகளை உத்தரப் பிரதேசம் திறம்பட செய்துவருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 9 கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன, 11 கிலோமீட்டருக்கு புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.