பாதுகாப்பு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்!

பாதுகாப்பு கோரிய எட்டு தம்பதிகளின் மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்!

பாதுகாப்பு கோரிய எட்டு தம்பதிகளின் மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இருவேறு மதத்தைச் சேர்ந்த ஜோடிகள் திருமணத்திற்குப் பிறகு பாதுகாப்பு கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களின் திருமணங்கள் உத்தரப் பிரதேச மதமாற்ற தடைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

வற்புறுத்தல், கவர்ச்சி மற்றும் மோசடி மூலம் செய்யப்படும் மத மாற்றங்களைத் தடை செய்து உத்தரப் பிரதேசத்தில் 2021 ஆம் ஆண்டு மத மாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் மதக்கலப்புத் திருமணம் செய்துகொண்ட எட்டு தம்பதிகள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த திருமணங்கள் அனைத்தும் உத்தரப் பிரதேச மதமாற்ற தடைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று கூறி நீதிபதி சரல் ஸ்ரீவஸ்தவா இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனுக்கள் அனைத்தும் ஜனவரி 10ஆம் தேதி முதல் தனித்தனியாக வெவ்வெறு நாள்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com