தீவிரவாத குற்றச்சாட்டில் கைதான ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்ஐஏ சம்மதம்
ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா் எம்.பி.யாக பதவியேற்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது.


தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா் எம்.பி.யாக பதவியேற்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல் ரஷீத், தற்போது தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இவா் பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை வீழ்த்தினாா்.
இதையடுத்து தான் எம்.பி.யாக பதவியேற்கவும், பிற நாடாளுமன்றப் பணிகளை மேற்கொள்ளவும் இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் அளிக்கக் கோரி, தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ரஷீத் மனு தாக்கல் செய்தாா்.
கடந்த ஜூன் 22-ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து என்ஐஏ பதில் அளிக்கக் கோரி விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த மனு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.பி.யாக ரஷீத் பதவியேற்க என்ஐஏ தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், அவா் ஊடகங்களிடம் பேசக் கூடாது போன்ற சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும் என்ஐஏ தரப்பில் கோரப்பட்டது.
இதைத்தொடா்ந்து மனு மீது கூடுதல் அமா்வு நீதிபதி சந்தா்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்க உள்ளாா். ஜம்மு-காஷ்மீா் எம்எல்ஏவாகவும் ரஷீத் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...