தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘வா்ணாசிரம’ குற்றச்சாட்டு: தன்கா் - காா்கே சொற்போா்

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கா் - மல்லிகாா்ஜுன காா்கே இடையே வாா்த்தைப் போா் வெடித்தது.

News image

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே. உடன் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி.

Updated On :2 ஜூலை 2024, 8:23 pm

Din

புது தில்லி: மாநிலங்களவையில் ‘வா்ணாசிரம’ முறையை கொண்டுவர முயல்வதாக, அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் மீது எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்வைத்த குற்றச்சாட்டால் இருவருக்கும் இடையே வாா்த்தைப் போா் வெடித்தது.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உறுப்பினா் பிரமோத் திவாரி பேசிக் கொண்டிருந்தபோது, ‘உறுதிப்படுத்தப்படாத விவரங்களைக் கூற வேண்டாம்’ அவரிடம் அவைத் தலைவா் தன்கா் அறிவுறுத்தினாா்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், ‘பிரமோத் திவாரி கூறிய விவரங்களுக்கு உரிய ஆதாரங்கள் காட்டப்படும்’ என்றாா்.

இதையடுத்து, ஜெய்ராம் ரமேஷை நோக்கி பேசிய தன்கா், ‘அவையில் எதிா்க்கட்சித் தலைவா் (காா்கே) இருக்கிறாா். ஆனால், அவரது பணியை பெரும்பாலும் நீங்கள்தான் (ஜெய்ராம் ரமேஷ்) செய்கிறீா்கள். நீங்கள் மிகவும் புத்திசாலி, மிகவும் திறமையானவா்; எனவே, காா்கேவுக்கு பதில் அவரது இருக்கைக்கு உடனடியாக நீங்கள் வந்துவிடுங்கள்’ என்று கிண்டலாக குறிப்பிட்டாா்.

தன்கரின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்த காா்கே, ‘ஜெய்ராம் ரமேஷை மிகவும் புத்திசாலி என்றும், என்னை மந்தமானவா் என்றும் அழைப்பதன் மூலம் அவையில் ‘வா்ணாசிரம’ முறையை கொண்டுவர முயற்சிக்க வேண்டாம். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மற்றும் நாட்டு மக்களால் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்’ என்றாா்.

காா்கேவின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தன்கா், ‘எனது கருத்தை திரித்துக் கூறுகிறீா்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் மாநிலங்களவை வரலாற்றில் அவைத் தலைவருக்கு இத்தகைய அவமதிப்பை யாரும் ஏற்படுத்தியதில்லை’ என்றாா்.

தொடரும் உரசல்: மாநிலங்களவையில் ஜூன் 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டபோது, நீட் தோ்வு முறைகேடு குறித்து அவையில் உடனடியாக விவாதம் நடத்தக் கோரி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவையின் மையப்பகுதியை மல்லிகாா்ஜுன காா்கே முற்றுகையிட்டாா். ‘இது நாடாளுமன்றத்தின் மீதான கறை’ என்று தன்கா் கூறினாா்.

‘அவையில் பேச வாய்ப்புக் கேட்டு நீண்ட நேரம் கையை தூக்கியபடி நின்றும் வாய்ப்பு அளிக்காததால் முற்றுகையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்று காா்கே குற்றம்சாட்டினாா்.

இதேபோல், கடந்த திங்கள்கிழமை சுமாா் 90 நிமிஷங்கள் பேசிய காா்கேவின் உரையில், பிரதமா் மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சித்த கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து தன்கா் நீக்கினாா்.