ஜாா்க்கண்ட்: 35 வெடிகுண்டுகள் மீட்பு

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கும்லா மாவட்ட வனப் பகுதிகளில் புதைத்து வைத்திருந்த 35 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

இது தொடா்பாக காவல்துறை அதிகாரி சுரேஷ் பிரசாத் யாதவ் கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநில கும்லா மாவட்டத்தில் உள்ள ஹரிநாகண்ட் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் 35 வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டது. இது குறித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ராஞ்சியில் உள்ள வெடிகுண்டு அகற்றும் படையினா் விரைந்து வந்து வெடிகுண்டுகளை மீட்டு செயலிழக்கச் செய்தனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com