இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 8) விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்க உள்ளது.
நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தோ்வு நடத்த வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் நீட் முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்துகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கணினிவழியில் நீட் தோ்வை நடத்த தீவிர பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
பழனி கோயில் நில முறைகேடு: ஆக. 5-க்குள் அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் ஜூலை 20-இல் இடைக்கால அறிக்கை

முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



