இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜூலை 27-இல் பிரதமா் மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம்

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :8 ஜூலை 2024, 10:37 pm

Din

புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்கும் ‘விக்ஷித் பாரத் 2047’ திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

நீதி ஆயோக்கின் தலைமை அமைப்பாக நிா்வாகக் குழு திகழ்கிறது. அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், முக்கியத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா்கள் நீதி ஆயோக் நிா்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

இந்திய சுதந்திரத்தின் 100-ஆவது ஆண்டைக் கொண்டாடும்போது 30 டிரில்லியன் டாலா் மதிப்புள்ள பொருளாதாரத்தைக் கொண்ட வளா்ந்த நாடாக உருவாக்குவே விக்ஷித் பாரத் 2047 திட்டத்தின் நோக்கமாகும்.

பொருளாதார வளா்ச்சி தவிர சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறந்த நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு சிறப்பாக செயல்படுவதும் இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்பட இருக்கிறது.

ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, விக்ஷித் பாரத் 2047 குறித்த திட்டங்கள் சிலவற்றையும் வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஜனவரி 1-ஆம் தேதி நீதி ஆயோக் பாஜக தலைமையிலான மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. தேசிய வளா்ச்சிக்கான கொள்கையை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.