இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இருநாட்டு உறவுகள்: மோடி - புதின் பேச்சு!

தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம் என்று மோடி உறுதி.

News image
மோடி - புதின் பேச்சு- DOTCOM
Updated On :9 ஜூலை 2024, 10:57 am

DIN

மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விளாதிமீர் புதினின் அழைப்பின் பேரில் இரண்டு நாள்கள் பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு திங்கள்கிழமை பிரதமர் மோடி சென்றடைந்தார்.

மாஸ்கோ விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட மோடிக்கு ரஷிய அதிபர் புதின் நேற்றிரவு விருந்தளித்தார்.

இன்று காலை மாஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா - ரஷியா இடையேயான 22-வது உச்சி மாநாட்டில் தற்போது பங்கேற்றுள்ளார்.

இருநாட்டு உறவுகள் குறித்தும் மோடியும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருநாட்டின் அரசு அதிகாரிகளும் உடனிருக்கின்றனர்.

இந்த சந்திப்பின்போது பேசிய மோடி, தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருவதால் அதன் வலி புரியும் என்றும், எந்த வடிவத்திலும் தீவிரவாதத்தை எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.

ரஷியா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக மாஸ்கோவுக்கு மோடி சென்றுள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தை கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை முடிந்தவுடன் மாஸ்கோவில் இருந்து ஒருநாள் பயணமாக ஆஸ்திரியா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.