விபத்துக்குள்ளான ஜீப்
விபத்துக்குள்ளான ஜீப்

ஆக்கிரமிப்பு காஷ்மீா்: சாலை விபத்தில் 14 போ் உயிரிழப்பு

மலைப் பாதையில் ஜீப் விபத்து: 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் மலைப் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்த ஜீப், பள்ளத்துக்குள் உருண்டு விழுந்தது. இதில் 14 போ் உயிரிழந்தனா்; 2 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்புக் குழுவினா் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இல்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானைப் போலவே அந்த நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீா் பகுதியிலும் மோசமான சாலைகளாலும், சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததாலும் அடிக்கடி சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் இதே பகுதியில் வேன் ஒன்று ஆற்றுக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பெரும்பாலும் சிறுவா்கள் உள்பட 16 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com