சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

அமர்நாத்: 4,600 பேர் அடங்கிய 13வது குழு புறப்பட்டது!

அமர்நாத் யாத்திரையின் 13வது குழு இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.

அமர்நாத் யாத்திரை

Updated On :

கனமழைக்கு மத்தியில் வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் 13வது குழு இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கியுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் 4,627 பேர் அடங்கிய பக்தர்கள் குழு இன்று காலை ஜம்முவில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களுக்குச் சென்ற பக்தர்களின் 13வது குழு இதுவாகும்.

இதில் 2,773 பக்தர்கள் அடங்கிய குழு 95 வாகனங்களில் 48 கிமீ உள்ள பஹல்காம் பாதை வழியாகவும், 1,854 பக்தர்கள் 14 கிமீட்டரில் உள்ள பால்டால் வழியாக 90 வாகனங்களில் புறப்பட்டனர்.

52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைகிறது. கடந்தாண்டு 4.5 லட்சம் பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.