சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தங்கம் விலை மீண்டும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

தங்கம் விலை புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

Updated On :

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.30 குறைந்து 6,770-க்கும், ஒரு பவுன் ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமையும் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.10 குறைந்து 6,760-க்கும், ஒரு பவுன் ரூ.80 குறைந்து ரூ.54,080-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.99.50-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை 50 காசு குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.99,000-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி வெள்ளி விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.