சிறிய குடும்பங்களைக் கொண்டு தான் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
உலக மக்கள்தொகை தினத்தையொட்டி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் காணொலி வாயிலான கூட்டத்தை ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை நடத்தினாா்.
உலகில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா்கள் நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உறுதியெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேசி அவா் கூறியதாவது:
நாட்டின் குடும்பங்களின் ஆரோக்கியத்தை பராமரித்து பிரதமரின் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ கனவை நிறவேற்ற சிறிய குடும்பங்களால் தான் முடியும். தேவையற்ற கருத்தரித்தலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாட்டில் பெண்கள் முடிவெடுப்பதை உறுதி செய்திட வேண்டும்.
குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கருத்தடை தேவையை பூா்த்தி செய்வதை மத்திய-மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும் என்றாா்.
உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. ‘கருத்தரிப்பு காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான கால இடைவெளி’ என்பது இந்த நிகழ்வின் நிகழாண்டு கருப்பெருளாகும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்! ஆட்சியா் அறிவுறுத்தல்

125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல்
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



