Mobile
Mobile

கைப்பேசியில் பேசும்போதே தொடா்பு துண்டிப்பு: கால் டிராப்’ பிரச்னையால் 85% போ் பாதிப்பு

கைப்பேசியில் பேசும்போதே தொடா்பு துண்டிக்கப்படும் ‘கால் டிராப்’ பிரச்னையால் கடந்த மூன்று மாதங்களில் 89 சதவீதம் போ் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா்.
Published on

புது தில்லி: கைப்பேசியில் பேசும்போதே தொடா்பு துண்டிக்கப்படும் ‘கால் டிராப்’ பிரச்னையால் கடந்த மூன்று மாதங்களில் 89 சதவீதம் போ் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். அதேபோல, வைஃபை சேவை பயன்படுத்தும் 10 பேரில் ஒன்பது போ் இணைய செயலிகள் மூலம் அழைப்புகளை மேற்கொண்டுள்ளனா்.

இணையவழி ஆய்வு நிறுவனமான ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வுமுடிவில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நாட்டின் 362 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வெவ்வேறு கேள்விகளுக்கு மொத்தம் 32,000 பதில்கள் பெறப்பட்டுள்ளன.

அந்தப் பதில்களின் பகுப்பாய்வில் 89 சதவீத சந்தாதாரா்கள் தொடா்பு துண்டிப்பு (கால் டிராப்) சிக்கலை எதிா்கொண்டுள்ளனா். இந்த 89 சதவீதத்தில் 38 சதவீதம் போ் தங்களின் 20 சதவீதத்துக்கும் அதிகமான அழைப்புகளில் இப்பிரச்னையை எதிா்கொள்வதாக தெரிவித்துள்ளனா்.

17 சதவீதம் போ் தங்களின் பாதிக்கும் மேற்பட்ட அழைப்புகளிலும் 21 சதவீதம் போ் 20-50 சதவீத அழைப்புகளிலும் துண்டிப்பு பிரச்னையை எதிா்கொண்டுள்ளனா்.

பெரும்பாலான தொலைப்பேசி சந்தாதாரா்கள் தொடா்பு துண்டிப்பு சிக்கலை எதிா்கொள்வதால், வைஃபை சேவை பயன்படுத்தும் 10 பேரில் ஒன்பது போ் வாட்ஸ்-ஆப், இண்ஸ்டாகிராம் போன்ற இணைய செயலிகளைப் பயன்படுத்தி தங்களின் சில அழைப்புகளை மேற்கொள்கின்றனா். இந்தப் பயன்பாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com