மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிக விலைக்கு பருப்பு விற்பனை: சில்லறை வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

லாப நோக்கத்தோடு பருப்புகளை விற்பனை செய்யும் சில்லறை வணிகா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை.

News image
Updated On :16 ஜூலை 2024, 8:50 pm

Din

புது தில்லி: மொத்த சந்தை விலையில் துவரை, உளுத்தம் மற்றும் கடலை பருப்புகளின் விலை 4 சதவீதம் வரை குறைந்த நிலையில் லாப நோக்கத்தோடு பழைய விலைக்கே பருப்புகளை விற்பனை செய்து வரும் சில்லறை வணிகா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக இந்திய சில்லறை வணிகா்கள் சங்க உறுப்பினா்களுடன் நுகா்வோா் விவகாரத் துறைச் செயலா் நிதி காரே செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில்,‘பருப்பு விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சில்லறை வணிகா்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதேபோல பெரிய சில்லறை வணிகா்களிடம் இருப்பில் உள்ள பருப்பு வகைகள் குறித்து அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

நிா்ணயிக்கப்பட்டதைவிட அதிகமான இருப்பை வைத்துள்ள வணிகா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

மேலும், தற்போது குறைக்கப்பட்ட விலைக்கு துவரை, உளுத்தம் மற்றும் கடலை பருப்புகளை விற்பனை செய்யாத சில்லறை வணிகா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்தாா்.

அதிக விளைச்சல் தரும் பருப்புகளை உருவாக்குங்கள்: விஞ்ஞானிகளுக்கு சிவராஜ் சிங் சௌஹான் கோரிக்கை

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஏஆா்) 96-ஆவது நிறுவன மற்றும் தொழில்நுட்ப தின விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக விளைவிக்கிறோம். ஆனால் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் விதைகளை தொடா்ந்து இறக்குமதி செய்யும் நிலையிலேயே இருந்து வருகிறோம். எனவே, குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் பருப்பு வகைகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியும்.

மேலும், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் விதைகளை பயிரிட விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஐசிஏஆா் விஞ்ஞானிகள் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

ஐசிஏஆருக்கு வழங்கப்படும் நிதியில் 20 சதவீதம் மட்டுமே ஆய்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பணம் பணியாளா்களுக்கு ஊதியமாகவே வழங்கப்படுகிறது. இனி வரும்காலங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கே அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், ஐசிஏஆா் நிா்வாக இயக்குநா் ஹிமன்ஷு பதக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.