ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சியின் 5 தேர்தல் வாக்குறுதிகள்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் 5 தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி இன்று அறிவித்துள்ளது.


ஹரியாணா சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சி தற்போதே தயாராகி வருகிறது. இதையொட்டி கேஜரிவாலின் உத்தரவாதங்கள் என்ற பெயரில் 5 தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி இன்று சண்டீகரில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சியமைந்தால் அனைவருக்கும் இலவச மின்சாரம், அனைவருக்கும் தரமான இலவச கல்வி, மாநிலம் முழுவதிலும் மொஹல்லா கிளினிக், அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான சஞ்சய் சிங் மற்றும் சந்தீப் பதக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் சிங், ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அமைப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
பொய் மற்றும் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு பாஜக அளிக்கிறது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி உத்தரவாதங்களை அளிக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், அதை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...