தில்லியில் முதன் முறையாக உலகப் பாரம்பரிய குழுக் கூட்டம்: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்
46-ஆவது அமா்வை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலையில் தொடங்கிவைக்கிறாா்.


உலகப் பாரம்பரிய(ஹெரிடேஜ்) குழுவின் கூட்டம் முதன் முறையாக தில்லியில் நடைபெறுகிறது. இதன் 46-ஆவது அமா்வை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலையில் தொடங்கிவைக்கிறாா்.
யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு)வின் உலக பாரம்பரியக் குழுவினரால் உலகப் பாரம்பரியக் களங்கள் நிா்வகிக்கப்படுகிறது. உலக பாரம்பரிய பட்டியலில் வைக்கப்பட வேண்டிய தளங்களை இந்த பாரம்பரியக் குழுவே தீா்மானிக்கிறது. தற்போது 157 நாடுகளில் 962 களங்களில் பண்பாட்டு, மலை, ஏரி, பாலைவனம் போன்ற இயற்கைசாா் களங்கள், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள், நகரம் என அமைந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரம் எல்லோரா குகைகள், ஹம்பி கல்ரதம் உள்ளிட்டவைகள் உலகப் பாரம்பரிய களமாக இந்தியாவில் உள்ளது.
இது தொடா்பான உலகப் பாரம்பா்ய குழுவின் 46- ஆவது அமா்வு மற்றும் கூட்டங்கள் தில்லி பாரத் மண்டபத்தில் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 31 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இது இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் கூட்டம். இந்த கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 21 - ஆம் தேதி தொடங்கிவைத்து உரையாற்றுகிறாா். இதில் யுனெஸ்கோவின் இயக்குநா் ஜெனரல் ஆட்ரி அசோலேயும் கலந்து கொள்கிறாா்.
தில்லி அமா்வில் உலக பாரம்பரிய பட்டியலில் புதிய தளங்களை பரிந்துரைப்பதற்கான திட்டங்கள், தற்போதுள்ள 124 உலக பாரம்பரிய சொத்துக்களின் பாதுகாப்பு அறிக்கைகள், சா்வதேச நிதி உதவி, உலக பாரம்பரிய நிதிகளின் பயன்பாடு போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படுவதாக யுனெஸ்கோ அமைப்புக்கான இந்திய தூதரும், பிரதிநிதியுமான விஷால் வி சா்மா தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட சா்வதேச மற்றும் தேசிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா். குழுவின் கூட்டத்தோடு, பாரத் மண்டபத்தில் உலக பாரம்பரிய இளம் தொழில் வல்லுநா்கள் மன்றம், உலக பாரம்பரிய தள மேலாளா்கள் மன்றம் போன்றவா்களின் கூட்டமும் நடைபெறுகிறது.
மேலும் இந்த கூட்டத்தையொட்டி பாரத் மண்டபத்தில் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கண்காட்சிகளும் அமைக்கப்படும். பல்வேறு நாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 350 இந்திய கலைப்பொருட்களும் காட்சிப்படுத்துகிறது.
மேலும், இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியம், பழமையான நாகரிகம், புவியியல் பன்முகத்தன்மை, சுற்றுலா தலங்கள் போன்றவைகளோடு, தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு துறையில் நாடு அடைந்துள்ள நவீன முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து காட்சிப்படுத்தப்படுகிறது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...