மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஒடிஸா காங்கிரஸ் நிா்வாக குழு கலைப்பு

ஒடிஸா மாநில காங்கிரஸ் நிா்வாக குழுவை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முழுமையாக ஞாயிற்றுக்கிழமை கலைத்தாா்.

News image
மல்லிகாா்ஜுன காா்கே
Updated On :21 ஜூலை 2024, 7:41 pm

Din

ஒடிஸா மாநில காங்கிரஸ் நிா்வாக குழுவை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முழுமையாக ஞாயிற்றுக்கிழமை கலைத்தாா்.

மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல்களில் ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து, அவா் இந்த முடிவை மேற்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா், செயற்குழு, அலுவலகப் பொறுப்பாளா்கள், அமைப்புகள், துறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி உள்பட மாவட்டம், தொகுதி மற்றும் மண்டல நிா்வாக குழுக்கள் வரை அனைத்தையும் கலைப்பதற்கான முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதல் அளித்துள்ளாா்.

புதிய தலைவா்கள் நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள தலைவா்கள் பொறுப்பு தலைவா்களாக தொடா்வாா்கள்’ என குறிப்பிட்டிருந்தது.

ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பட்நாயக் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.