லஞ்சம் விவகாரம்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மொத்த பட்ஜெட்டில் 13% பாதுகாப்புத் துறைக்கு, அதிக ஒதுக்கீடு: நிர்மலாவுக்கு ராஜ்நாத் சிங் நன்றி!

பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 6,21,940.85 கோடி ஒதுக்கீடு

News image

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் / நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - பிடிஐ

Updated On :23 ஜூலை 2024, 6:45 pm IST

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 23) நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ரூ. 6,21,940.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2024 - 25ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் 12.9% ஆகும்.

இதில் மூலதன செலவு ரூ. 1,72,000 கோடி, ஆயுதப்படையை வலுப்படுத்த உதவும். உள்நாட்டு மூலதன கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1,05,518.43 கோடி, தன்னிறைவில் உத்வேகத்தை அதிகரிக்கும்.

எல்லையோரப் பகுதிகளிலுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை 30% (ரூ.6,500 கோடி) கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எல்லையோர சாலை அமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தொகை எல்லையோர உள்கட்டமைப்புகளை துரிதப்படுத்தும். பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தாக்கத் தொழில்களை ஊக்குவிக்க ரூ.518 கோடி வழங்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார் ராஜ்நாத் சிங்.

மற்றொரு பதிவில், சிறப்பான மற்றும் தன்னிகரற்ற ஆண்டு பட்ஜெட்டை (2024 - 2025) தாக்கல் செய்ததற்காக நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள்.

வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் விக்சித் பாரத் இலக்கை நோக்கிய நகர்வுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வேகமான வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.