

ஆந்திர பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் உரையாற்றி வருகிறார்.
ஆந்திரம், பிகார் மாநில முதல்வர்கள் தங்களின் மாநில வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த கூடுதல் நிதி கோரியிருந்தனர்.
இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிகார், ஜார்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ. 26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிகாரின் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகாருக்கு வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,000 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ. 15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் மின்சாரம், ரயில்வே, சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வங்கதேசத்துக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைப்பு

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி! நிகழாண்டு 15.19 சதவீதம் அதிகம்!

அமைச்சா்கள் ஊதியம், அரசு விருந்தினா் உபசரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.1,102 கோடி!

உள்துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

