தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி: மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் கோரிக்கை விடுத்தார்

News image
மெட்ரோ ரயில்
Updated On :24 ஜூலை 2024, 11:06 pm

DIN

நமது சிறப்பு நிருபர்

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், "இது தமிழக அரசின் திட்டம்' என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சென்னை மாநாகரின் 2-ஆம் கட்டத் திட்டத்துக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ. 63,246 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளிக்காதது குறித்தும் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்தும் தமிழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசினார்.

இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவில் 50 சதவீதம் நிதியாக ரூ.31,623 கோடியை வழங்குவதாக ஏற்கெனவே மத்திய அரசு ஒப்புக்கொண்டது குறித்து குறிப்பிட்டு அந்த நிதியை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) மத்திய அரசிடம் சமர்ப்பித்தும் அனுமதிக்கப்படாதது குறித்தும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கேஆர்என் ராஜேஷ்குமார் புதன்கிழமை பேசியது:

பொது முதலீட்டு வாரியம் 2021 ஆகஸ்ட் 17- ஆம் தேதியே மெட்ரோ திட்டத்துக்கான பரிந்துரையை அளித்திருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்காக இந்தத் திட்டம் நிலுவையில் உள்ளது. தற்போது இந்தத் திட்டத்துக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டிய நிலையில் மாநிலத்தின் நிதிநிலையை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் " ஒரு சதுர கி.மீ.க்கு 26,533 பேர் வீதம் மொத்தம் 1.2 கோடி பேர் வசிக்கின்றனர்.

சென்னை மாநகரம் மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த நகரமாக விளங்குவதோடு, போக்குவரத்து நெரிசலும் மிகுந்துள்ளது.

தமிழக முதல்வர் பலமுறை இந்தத் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்தார். மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தி இதற்கு நிதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.