தில்லி: உயிரிழந்த ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு -துணைநிலை ஆளுநர் உத்தரவு


தில்லி கரோல் பாக் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள தனியாா் ஐஏஎஸ் தோ்வு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மழை-வெள்ளம் புகுந்ததில் மூன்று குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்தனா்.
பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழை - வெள்ளம் புகுந்ததில் உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தை சோ்ந்த தன்யா சோனி (25), கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த நவின் டால்வின் (28) ஆகியோா் உயிரிழந்ததாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், புதுதில்லியில் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்க தில்லி துணைநிலை ஆளுநர் வி. கே. சாக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட விபத்தைத் தொடர்ந்து, தில்லி கரோல் பாக் பகுதியில் சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 13 பயற்சி மையங்களுக்கு தில்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி கரோல் பாக்கில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பயிற்சி மையத்தில் 3 தேர்வர்கள் உயிரிழந்த விவகாரத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் இன்று(ஜூலை 29) உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...