மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை- மும்பை விமானத்தில் வெடிகுண்டு? பயணிகள் அவசரமாக வெளியேற்றம்!

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2024, 6:56 am

சென்னையிலிருந்து மும்பை புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று(ஜூன் 1) காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ - 5134’ என்ற விமானம் மும்பை செல்ல தயாராக இருந்தது.

இந்த நிலையில், 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் காலை 8.45 மனியளவில் அவசர அவசரமாக இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன்பின், விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளியன்று தில்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் அதிலிருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல, கடந்த செவ்வாயன்று தில்லியிலிருந்து வாராணசி செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிலிருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமானப் போக்குவரத்து குறித்த அச்சம் பயணிகளிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.