குமரியில் மோடி செய்த தியானத்தால் சூரியன் சாந்தமடைவார்: பாஜக எம்.பி.

குமரியில் மோடி செய்த தியானத்தால் சூரியன் சாந்தமடைவார் என்றார் பாஜக எம்.பி.
குமரியில் மோடி
குமரியில் மோடி

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி 45 மணி நேரம் செய்த தியானத்தால், சூரிய பகவான் சாந்தடைவார், நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்படும், மக்கள், அதீத வெப்பத்திலிருந்து தப்பிப்பார்கள் என்று கோராப்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும் பாஜக வேட்பாளருமான ரவி கிஷண் தெரிவித்துள்ளார்.

கோராக்பூரில் இன்று தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரவி கிஷண் தெரிவித்திருக்கும் கருத்துகள் பலத்த விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், அவர் பேசிய விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

தொடர்ந்து ரவி கிஷண் பேசியிருப்பதாவது, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் பிரதமர் மோடி மேற்கொண்ட தியானம் மற்றும் சூரிய வழிபாடு காரணமாக, சூரியன் சற்று சாந்தமடைவார், இனி நாடு முழுவதும் வெப்ப அலை குறையும். இதனால் மக்கள் அதீத வெப்பத்தாக்கத்திலிருந்து தப்பிப்பார்கள் என்றும், வெப்பத்தால் இனி மக்கள் உயிரிழக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

பாஜக வேட்பாளரும், எம்.பி.யுமான ரவி கிஷன் இவ்வாறு கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com