ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரூ.7,755 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்ப வரவில்லை

ரூ.7,755 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்ப வரவில்லை

News image
Updated On :3 ஜூன் 2024, 6:51 pm IST

புது தில்லி: புழக்கத்தில் விடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 2.2 சதவீத நோட்டுகள் அதாவது ரூ.7,755 கோடி மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில், ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராத ரூபாய் நோட்டுகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு மே மாத இறுதி வரை, மத்திய ரிசர்வ் வங்கிக்கு 97.82 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. அதாவது, 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்தபோது நாடு முழுவதும் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

கடைசியாக, 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியிடம் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான கடைசி நாள் 2023 ஆக்டோபர் 7ஆம் தேதி. அதன்பிறகு ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில், பல்வேறு வழிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

மக்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அஞ்சல் மூலமாக, ஆர்பிஐ கிளைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி பணமாக மாற்றிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டபோது ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.