
ஜார்க்கண்டில் 32 காட்டுக் குரங்குகள், அதிக வெப்ப அலையினால் ஏற்பட்ட தாகத்தைத் தீர்க்கும்போது நீர்ப்பாசன கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜார்க்கண்டில் 44 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. இப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. காட்டு விலங்குகள் தண்ணீரைத் தேடி கிராமங்களுக்குள் வருகின்றன. ஜூன் 2-ல் ஜார்க்கண்டின் சோரத்தில் நீர்ப்பாசன கிணற்றினுள் 32 குரங்குகள் உயிரிழந்த நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குரங்குகள் தாகத்தைத் தீர்க்கும்போது நீர்ப்பாசன கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் சம்பவத்தின் சரியான தேதி இன்னும் அறியப்படவில்லை.
சில தினங்களுக்கு முன்பு, காட்டில் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருந்த 3 நரிகள் கிணற்றில் இறந்துள்ளன. மற்றும் கடந்த வாரம், ஹசாரிபாக், கிரிடிஹ், ராஞ்சி, கர்வா மற்றும் பலாமு மாவட்டங்களில் வெளவால்கள் இறந்துள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் ஜார்க்கண்டில் வெப்பத்தின் தாக்கத்தால் 4 பேர் இறந்தனர், மேலும் 1,326 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.