ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் அசாதுதீன் ஓவைசி முன்னிலை வகிக்கிறார்.
ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் அசாதுதீன் ஓவைசி, பாஜக வேட்பாளர் மாதவி லதா, காங்கிரஸ் வேட்பாளர் முகமது வலியுல்லா சமீர் மற்றும் பிஆர்எஸ் வேட்பாளர் கடம் ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
பாஜக வேட்பாளர் மாதவி லதா தேர்தல் பிரசாரத்தின் போது, மசூதி ஒன்றின்மீது அம்பு வி்டுவது போன்ற செயலால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்காளர் அடையாள அட்டையை மாதவி லதா ஒப்பிட்டு சரிபார்த்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.