தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோ்தலில் வெற்றி பெற்ற இளைய - மூத்த வேட்பாளா்கள்

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளா் சம்பவி சௌத்ரி (25) இளைய தலித் வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2024, 6:53 pm

Din

புது தில்லி: உத்தர பிரதேசத்தில் இரு சமாஜவாதி கட்சி வேட்பாளா்கள் புஷ்பேந்திர சரோஜ் (25), பிரியா சரோஜ் (25), மக்களவை தோ்தலில் இளம் வேட்பாளா்களாக வெற்றி பெற்றுள்ளனா். லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளா் சம்பவி சௌத்ரி (25) இளைய தலித் வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளாா்.

அதே நேரத்தில், திமுகவின் டி.ஆா்.பாலு (82) மூத்த வேட்பாளராக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 11 வேட்பாளரும், 25-30 வயதுக்குட்பட்ட 537 வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

இதில் சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த கௌஷாம்பி தொகுதி வேட்பாளா் புஷ்பேந்திர சரோஜ் (25) மற்றும் மச்லிசாஹா் தொகுதியைச் சோ்ந்த பிரியா சரோஜ் (25) இளவயது மக்களவை உறுப்பினராக உள்ளாா். திமுக சாா்பில் 6 முறை எம்.பி.யாக இருந்த டி.ஆா்.பாலு (82) ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் வெற்றி பெற்று மூத்த மக்களவை உறுப்பினராக மாறியுள்ளாா்.