
நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.
மத்திய அமைச்சரவையில் பிரதமர் உள்பட மொத்தம் 72 அமைச்சர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 24 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
தமிழகத்திலிருந்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் விழாவில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.