பதவியேற்பு விழா மேடையில் மோடி!
மத்திய அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது.


பதவியேற்பு விழா நடைபெறும் மேடைக்கு நரேந்திர மோடி வருகை புரிந்தார்.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்கவுள்ளதையொட்டி, பல்வேறு தலைவர்கள் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சர்வதேச தலைவர்களும், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபா் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இதேபோன்று மருத்துவம், சினிமா, தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் விழாவுக்கு வருகைதருகின்றனர்.
முகேஷ் அம்பானி, நடிகர் ஷாருக்கான் அடுத்தடுத்து ஒன்றாக பதவியேற்பு விழாவுக்கு வருகை புரிந்தனர். இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், நாகேந்திர பாபு, ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...