சவாலான கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷன் கைதானது எப்படி?
சவாலான கொலை வழக்கில் கன்னட நடிகர் கைதானதன் பின்னணி


சினிமா பாணியில் மிகவும் சவாலான கொலை வழக்கில், மிக சாமர்த்தியமாக துப்பு துலக்கிய காவல்துறையினர், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளைப் பதிவிட்டவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னட திரையுலகில் கரியா, கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா, கலாசிபாளையா, கஜா, நவகிரஹா, புல்புல், யஜமானா, ராபா்ட், காலாரே உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவா் நடிகா் தா்ஷன். இவா், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமி (33) என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதாகியிருக்கிறார்.
குற்றத்தின் பின்னணி?
பெங்களூரு, சுமனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதைக் கண்ட அடுக்குமாடி குடியிருப்புக் காவலா், இதுகுறித்து காமாக்ஷிபாளையா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
தகவல் அறிந்ததும் அங்குவந்த போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், இறந்தவா் சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமி என்று அடையாளம் காணப்பட்டது.
இந்த வாக்கில்தான் நடிகா் தா்ஷன் உள்ளிட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி 13 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து பெங்களூரில் மாநகர காவல் ஆணையா் பி.தயானந்தா கூறுகையில்,
நடிகா் தா்ஷன் (46) ஏற்கெனவே விஜயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில், அவா், 35 வயது மதிக்கத்தக்க நடிகை பவித்ரா கௌடா என்பவருடன் நெருக்கமாகப் பழகி வந்தாா். இதுகுறித்து அறிந்துகொண்ட நடிகா் தா்ஷனின் ரசிகா் ரேணுகாசாமி என்பவா் பவித்ரா கௌடா குறித்த ஆபாசப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளாா்.
தர்ஷன் தனது மனைவியைப் பிரியக் காரணமே பவித்ரா தான் என்றும், பவித்ரா தர்ஷனிடமிருந்து விலக வேண்டும் என்றும் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டார்.
கைதானது எப்படி?
இந்த கொலையில், தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் கைதாக, அவரிடம் நடத்திய விசாரணையில் மெல்ல மர்ம முடிச்சு விலகத் தொடங்கியது. ரசிகர் மன்றத் தலைவர் மூலம் ஆள்களை அமர்த்தி, தர்ஷன்தான், ரேணுகாசாமியை கடத்திக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் நடந்த இடத்தில், தர்ஷனும் பவித்ராவும் இருந்த சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன. அதேவேளையில், தர்ஷனின் செல்போன் எண்ணும், அங்கிருக்கும் நெட்வொர்க்கில் தொடர்புகொள்ளப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்தே தர்ஷன், பவித்ரா கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவப் பகுதிக்குள் தர்ஷன் வாகனம் வந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். அதேவேளையில், பலியான ரேணுகாசாமியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பவித்ராவுக்கு மோசமான செய்திகளும் புகைப்படங்களும் அனுப்பப்பட்டிருப்பதையும் காவல்துறை உறுதி செய்திருக்கிறது.
கன்னட திரையுலகில் தர்ஷன் தந்தை, சகோதரர் எல்லோருமே மிக முக்கிய பிரபலங்களாக இருந்த நிலையில், அவரும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். கடந்த காலங்களிலும் அவர் பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த நிலையில், தற்போது கொலை வழக்கில் கைதாகியிருக்கிறார்.
முதற்கட்ட விசாரணையில், பவித்ராவுக்கு ரேணுகாசாமி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் ஆவேசமடைந்த நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா ஆகியோா் ரேணுகாசாமியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனா். இருவரும் சிலா் உதவியுடன் ரேணுகாசாமியை சித்ரதுா்காவில் இருந்து மைசூரில் உள்ள ஒரு கொட்டகைக்குக் கடத்திவந்தனா்; அங்குவைத்து அவரைக் கொலை செய்துள்ளனா். பின்னா் உடலை பெங்களூருவுக்குக் கொண்டுவந்து, காமாக்ஷிபாளையாவில் உள்ள மழைநீா் கால்வாயில் வீசிச் சென்றுள்ளனா். அப்போது இதைக் கண்ட குடியிருப்புக் காவலா் போலீஸாருக்கு தகவல் தந்ததால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை விரைந்து கைது செய்ய முடிந்தது என்கிறார்கள் காவல்துறையினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...