குவைத்திலிருந்து கொச்சி வந்தடைந்த 31 பேரின் உடல்கள்!

குவைத்திலிருந்து கொச்சி வந்தடைந்த 31 பேரின் உடல்கள்!

தமிழத்தை சேர்ந்த 7 பேரின் சடலமும் கொச்சி வந்தடைந்தது.
Published on

குவைத் தீ விபத்தில் பலியானவர்களில் 31 பேரின் உடல்கள், ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது.

கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு சடலங்களை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 196 போ் வசித்து வந்த நிலையில், புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளத்தை சேர்ந்த 23 தொழிலாளர்களின் உடல்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வரும் பணியை மேற்கொள்வதற்காக மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் தலைமையிலான குழு நேற்று காலை குவைத் சென்றடைந்தது.

இந்த நிலையில், 45 பேரின் உடல்களையும் இந்திய ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.

அந்த விமானத்திலேயே வெளியுறவுத்துறை இணையமைச்சர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளும் வந்தடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com