தில்லி: 245 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது
தில்லியில் 245 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து கிழக்கு தில்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா கூறுகையில், காவல் கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல் துறையினர், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், 250 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், ராணுவ வீரர்களின் வீட்டு உபயோக பொருள்களுடன், போதைப்பொருள் கடத்தியதாக, எங்களுக்கு தகவல் கிடைத்தது.
தில்லியில் அதிக அளவில் போதை பொருள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், காஜிபூர் சப்ஜி மண்டிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்ய ஒரு டிரக் வருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நாங்கள் சோதனை நடத்தி டிரக்கில் இருந்து கிட்டத்தட்ட 215 கிலோ கஞ்சாவை மீட்டோம். இந்த வழக்கில் மொத்தம் 245.5 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. டிரக்குடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
முன்னதாக ஜூன் 12 ஆம் தேதி, தில்லி, துவாரகா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, போதைப்பொருள் வியாபாரி மற்றும் போதைப்பொருள் வாங்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், நஜாப்கரில் உள்ள மருத்துவக் கூடத்தின் உரிமையாளரான பிரசாந்த் ஷர்மாவிடம் 98 போதை மாத்திரைகள், புப்ரெனார்ஃபின் மருந்து மற்றும் 8 போதை ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...