கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது.
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு மாநில வருவாயை அதிகரிப்பதற்காக, பெட்ரோல், டீசலுக்கான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதமும், 18.44 சதவீதமும் சனிக்கிழமை(ஜூன் 15) உயர்த்தியதைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு அமலாகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தலைநகர் பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.84க்கு விற்பனையான நிலையில், விலை உயர்வால் ரூ. 102.84க்கு விற்பனை செய்யப்படுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஒரு லிட்டர் டீசல் ரூ.85.93க்கு ஆக விற்பனையான நிலையில், விலை உயர்வால் ரூ. 88.95க்கு விற்பனை செய்யப்படுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.