

உத்தரப் பிரதேசத்தில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
ஹரியாணா மாநிலம் பானிபட்டில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.
ரயிலின் பெட்டியில் இருந்து புகை வெளியேறியதால் சுல்தான்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்தனர். இந்த விவகாரத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
என்ஜினில் இருந்து 12வது பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக உள்ளூர் ஊழியர்கள் தனக்கு தகவல் கொடுத்ததாக சுல்தான்பூர் ரயில்வே சந்திப்பு கண்காணிப்பாளர் வி கே குப்தா தெரிவித்தார்.
முன்கூட்டியே கண்டறியப்பட்டு தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.