ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

இன்றுமுதல் 10-ஆவது அலைக்கற்றை ஏலம் தொடக்கம்: முன்னணி ஏலதாரராக ஜியோ

ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட அலைவரிசைகளின் ஏலம் இன்று தொடங்க உள்ளது.
Published on

கைப்பேசி சேவைகளுக்கு ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட 8 அலைக்கற்றை அலைவரிசைகளின் ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.

கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்டில் அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில் முதல்முறையாக 5ஜி சேவைகளுக்கான ரேடியோ அலைகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், 10-ஆவது அலைக்கற்றை ஏலம் ஜூன் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளது. மத்திய அரசின் இந்த ஏலத்தில் 800, 900, 1,800, 2,100, 2,300, 2,500, 3,300 மெகாஹா்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹா்ட்ஸ் என மொத்தம் 8 அலைவரிசைகளில் உள்ள அலைக்கற்றைகள் ஏலம் விடப்படவுள்ளன. இந்த அலைக்கற்றை அலைவரிசைகளின் அடிப்படை விலை ரூ.96,317 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்துக்கு அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.3,000 கோடி வைப்புத்தொகை செலுத்தியுள்ளது. இதைத்தொடா்ந்து பாா்தி ஏா்டெல் ரூ.1,050 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.300 கோடி வைப்புத்தொகை செலுத்தியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com