முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தண்ணீர் விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: அதிஷி

என் உடல் எவ்வளவு பாதிக்கப்பட்டாலம ஹரியாணா தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தைத் தொடருவேன் என்றார்.

Center-Center-Delhi

Published On :

தில்லியில் நான்காவது நாளாகத் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தில்லியின் பங்கு தண்ணீரை ஹரியாணா அரசு விடுவிக்க மறுத்துள்ள நிலையில் தலைநகரில் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அதிஷி கூறுகையில்,

தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து என் எடை குறைந்துள்ளது. கிட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

என் உடல் எவ்வளவு பாதிக்கப்பட்டாலம ஹரியாணா தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தைத் தொடருவேன் என்றார்.

தில்லி அமைச்சர் ஞாயிறன்று மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களாக யமுனை நீரில் தில்லியின் பங்கை ஹரியணா ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன் (எம்ஜிடி) குறைத்துள்ளது. இதனால் தில்லியில் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, ஆம் ஆத்மிக் குழுவுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, கூடுதல் தண்ணீர் வழங்க முடியுமா என்பதைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.