என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி! -ராகுல் காந்தி
என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், “என் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்திய சகோதர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது வெறும் பதவி மட்டுமல்ல. உங்கள் குரலாக மாறி உங்கள் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவது மிகப்பெரிய பொறுப்பாகும்.
ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் மிகப்பெரிய ஆயுதம் நமது அரசியலமைப்புச் சட்டம், அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுத்து அதைப் பாதுகாப்போம். நான் உங்களுடையவன், உங்களுக்காக மட்டுமே..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...