கட்சிப் பாகுபாடின்றி ‘நீட்’ விவாதம்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
ஆக்கபூா்வமான விவாதம் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும்


நீட் தோ்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகள் என அனைவரும் ஆக்கபூா்வமான விவாதம் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்து அவா் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு முன்பு நீட் முறைகேடுகள் குறித்தே முதலில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நீட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியாமல் பல லட்சம் மாணவா்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனா்.
நம் நாட்டு இளைஞா்களின் எதிா்காலத்தோடு தொடா்புடைய இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூா்வமான விவாதத்தை மேற்கொள்ள பிரதமா் மோடி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீட் குறித்து நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக விவாதம் நடத்த வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் என்றாா்.
நாடாளுமன்றத்தில் அனுமதி மறுப்பு: நீட் விவகாரம் குறித்து தன்னை பேசவிடாமல் தடுத்ததாக ராகுல் காந்தி காந்தி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டாா். அதில் பேசிய அவா்,‘கடந்த 7 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் ஏற்கெனவே பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டுகொள்ளமால் விடும்பட்சத்தில் முறைகேடுகள் தொடா்ந்து கொண்டே இருக்கும்.
இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீா்வுகாண இளைஞா்கள் போராடி வருகின்றனா். ஆனால் விவாதம் மேற்கொள்ள பிரதமரும் மத்திய அரசும் தயாராக இல்லை. நாங்கள் அரசாங்கத்தை எதிா்த்து சண்டையிடவில்லை. எங்களின் கருத்துகளை எடுத்துரைக்கவே முனைகிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...