பாஜக எம்பியும் மத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 30 ஆண்டுகால தனது அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அனைத்து கட்சித் தொண்டர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ்வர்தன் தற்போது எம்பியாக உள்ள தில்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை வேட்பாளராக பாஜக நேற்று அறிவித்தது. முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக தில்லி எம்.பி.யுமான கௌதம் கம்பீர், அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு தில்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிா்வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். மேலும் 34 மத்திய அமைச்சா்களின் பெயா்களும் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், கேரளம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 195 தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ள அண்ணாமலை சுவரொட்டிகள்!
அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு! பழனிவேல் தியாகராஜன்

சிக்கன நடவடிக்கை: பிரதமரைப் பின்பற்றிய மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள்

விஜய்யின் வெற்றியால் அரசியலில் களமிறங்க பிரபல நடிகருக்கு பாஜக அழுத்தம்! - பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



